இனிவரும் ஆண்டுகளில் அந்தந்த வருடங்களின் தொகுப்பில் பிரமிட் சாய்மீரா எத்தனை படங்களை தயாரித்தது? எத்தனை படங்களை ரிலீஸ் செய்தது என்ற விபரத்தையும் வெளியிட வேண்டி வரும். அந்தளவுக்கு தமிழ்சினிமாவின் முக்கிய சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். சாதனைகளின் தொடர்ச்சியாக, வருடத்திற்கு 24 தயாரிப்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு படத்திற்கு இரண்டு கோடி வரை கொடுத்து படம் எடுக்க உதவி செய்யப் போகிறது பிரமிட் சாய்மீரா.
பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைக்காமலும், சின்ன சின்ன பிரச்சனைகள் காரணமாக படம் எடுக்க இயலாமலும் இருக்கிற தயாரிப்பாளர்கள் இந்த லிஸ்ட்டில் இடம் பிடிக்க இருக்கிறார்கள். வரும் பொங்கல் தினத்திற்கு முன்பாக 12 தயாரிப்பாளர்களின் பெயர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்களாம். இவர்களுக்கு பொங்கல் தினத்தன்று தமிழக முதல்வர் கலைஞர் திருக்கரங்களால் அட்வான்ஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மீதம் உள்ள 12 பேர்களின் பெயர்களையும் விரைவில் அறிவிக்க இருக்கிறது பிரமிட் சாய்மீரா. இந்த திட்டத்தின் மூலம், புதுப்புது இயக்குனர்களும், புதுமுக நடிகர்களும் சினிமா துறைக்கு கிடைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இந்நிறுவனத்தின் தலைவர் சுவாமிநாதன். நாங்கள் கார்ப்பரேட் அல்ல, கோ-ஆபரேட் என்கிறார் மற்றொரு தலைவரான பிரமிட் நடராஜன்.
Thanks to tamilcinema


0 comments