உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தும், ரஷ்யாவின் புகழ்பெற்ற ஆட்டக்காரர் விளாடிமிர் கிராம்னிக்கும் உலக செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்!இவர்கள் இருவரும் 2,799 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 3வது இடத்தில் வெஸலின் டோப்பலோ (2,787), 4வது இடத்தில் அலெக்சாண்டர் மொரோசெவிச், 5வது இடத்தில் இங்கிலாந்தின் பீட்டர் சுவைட்லர் ஆகியோர் உள்ளனர். உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர்கள் கிருஷ்ணன் சசிகரண் 39வது இடத்திலும், வெண்ட்டல அரிகிருஷ்ணா 53வது இடத்திலும் உள்ளனர். உலக மகளிர் செஸ் தரவரிசைப் பட்டியலில் ஹங்கேரி கிராண்ட் மாஸ்டர் ஜூடித் போல்கர் முதலிடத்திலும், இந்திய கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்ப்பி 2வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் சுபராமன் விஜயலட்சுமி 25வது இடத்திலும், துரோனவல்லி ஹரிக்கா 33வது இடத்திலும், தானியா சச்சிதேவ் 48வது இடத்திலும் உள்ளனர்.


Ur messages in sunsat group is very nice. ur entering the message in tamil. but some system will not show the message. So please enter the message in international language "english". that is useful to all sunsaters in the world.
Thanks
Pillai telling message is 100% true. So keep the message in english.
Thanks