Welcome to My Website

அஜீத்-ஷாலினி தம்பதிகளுக்கு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற அப்போலோ மருத்துவமனையில் 2-ந் தேதி காலை சேர்க்கப்பட்டார் ஷாலினி. நள்ளிரவு 1.30 மணிக்கு சிசேரியன் ஆபரேஷன் மூலம் பிறந்த இந்த குழந்தையின் எடை 3.3 கிலோ. சிவந்த நிறத்தில் அப்பாவின் சாயலில் இருப்பதாக அஜீத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2000-ம் வருடத்தில் ஏப்ரல் 24-ந் தேதி அஜீத்திற்கும், ஷாலினிக்கும் காதல் திருமணம் நடந்தது. திரையுலகமே பொறாமைப்படுகிற அளவுக்கு கருத்தொருமித்த தம்பதிகளாக இருந்தார்கள் இருவரும். படப்பிடிப்பு நேரங்களில் கூட அஜீத்தின் அருகிலேயே இருந்து அவரை கவனித்துக் கொண்டார் ஷாலினி. பில்லா படப்பிடிப்பில் மலேசியாவில் இருந்த அஜீத், கருவுற்றிருக்கும் தன் மனைவியை பார்க்க வாரா வாரம் அங்கிருந்து வந்துவிடுவார். அருகில் இருந்து அவரை ஆறதலாக பார்த்துக் கொண்டார். பில்லாவிற்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்தை பிப்ரவரி இறுதியில் துவங்க திட்டமிட்டிருக்கிறார் அவர். உடனடியாக துவங்காமல் இருப்பதன் காரணம், அருகில் இருந்து தாயையும், சேயையும் கவனித்துக் கொள்ளதானாம்.

1 Responses to அஜீத்-ஷாலினிக்கு அழகான பெண்குழந்தை

  1. CresceNet Says:
  2. Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my site, it is about the CresceNet, I hope you enjoy. The address is http://www.provedorcrescenet.com . A hug.