Welcome to My Website

Jan02 : Tamil Cinema Bits

Posted by Rulez Admin Jan 2, 2008

தசாவதாரம் படத்தில் கமலுக்கு ஜோடி சேர்ந்திருக்கிற அசின் ஒரு காட்சியில் ஜாக்கெட் போடாமல் புடவை மட்டும் கட்டி நடித்திருக்கிறாராம். இதை பார்த்துவிட்டு வில்லேஜ் கதைகளில் நடிக்க அழைப்பார்களோ என்ற அச்சமும் இருக்கிறதாம் அவருக்கு.



தயாரிப்பாளர் ஆனதை தொடர்ந்து இயக்குனர் ஆகும் ஆசையும் இருக்கிறது மாதவனுக்கு. அதற்கு முதல் படிதான் எவனோ ஒருவன் படத்திற்கு வசனம் எழுதியது. நான் இயக்கும் படத்தை பார்க்க நீங்கள் 2010 வரை காத்திருக்க வேண்டும் என்கிறார். காத்திருப்போமே!



முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் நடிக்கிறார் பரத். இந்த படத்தை தயாரிப்பது மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தாமரை உணவகத்தை நடத்தி வரும் துரைசிங்கம். பரத்திற்கு ஜோடியாக நடிக்கும் புதுமுகத்திற்கும் தாமரை என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்.

0 comments